விக்னேஷ்வரன் சான்று சரிபார்ப்பு தொடர்பாக
தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்ததால் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற விக்னேஷ்வரன் சான்று சரிபார்ப்பு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு தொடர்பாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் மின்னஞ்சலுக்கும் அவரது வாட்ஸ் ஆப் க்கும் வேண்டுகோள் கடிதம் வந்துள்ளது. கடிதம் குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என மனுதாரர் விக்னேஸ்வரன் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார். நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகுகிறேன் என்றும் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தெரிவித்தார். இந்தநிலையில் எனக்கு நேரடியாக கடிதம் எழுதியது நீதி பரிபாலனத்தில் தலையிடுவதைப் போல உள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வழக்கை விசாரிக்க விரும்பவில்லை, வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்