இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர்ந்து இந்தியாவில் ஆண்டு தோறும்நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 11வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சி, முன்னாள் சாம்பியன்கள் மோகன்பகான் எஸ்ஜி, சென்னையின் எப்சி, பெங்களூர் எப்சி, ஐதராபாத் எப்சி உட்பட 13 அணிகள் களம் காண உள்ளன. இதில் 13வது அணியாக, முகமதன் எஸ்சி கிளப் புதிதாக இணைந்துள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2முறை உள்ளூர், வெளியூர் அரங்கங்களில் மொத்தம் 24 ஆட்டங்களில் விளையாடும்.

கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில மோகன் பகான்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அதற்கு முன் 10 முறை மோதி உள்ளன. இதில் 7ல் மும்பை, ஒன்றில் மோகன்பகான் வென்றுள்ளன. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது. சென்னையின் எப்சி தனது முதல் போட்டியில் நாளை மாலை 5 மணிக்கு ஒடிசா எப்சியை புவனேஸ்வரில் எதிர்கொள்கிறது. நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எப்சி-ஈஸ்ட் பெங்கால் எப்சி அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன

Leave a Reply

Your email address will not be published.