ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் உத்தரவு.
அரசியல் சாசனப்படி, கடந்த 6 மாதங்களாக சட்டப்பேரவை கூட்டம் நடக்காததால், இன்றுடன் தானாகவே சட்டப்பேரவை கலைந்துவிடும்.
அப்படி கலைந்தால், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை தற்போதைய அரசு ’காபந்து அரசாக’ தொடர முடியாது என கூறப்படுகிறது.
இதனை தவிர்க்க, சட்டப்பேரவையை கலைக்குமாறு மாநில அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
ஹரியானாவில் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.