மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 30 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாடியாவில் ராஜ்கர் கோட்டைக்கு கீழே இருந்த பழமையான சுவர் இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து அங்கு இருந்த வீட்டின் மேல் விழுந்தது. இதில் 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 7 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.