3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம்
பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வழங்கப்பட்ட பணி மாறுதலில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தஞ்சை மாவட்டம் கும்பகோண்டம் மாவட்ட கல்வி அலுவலராக இருந்த ரவிச்சந்திரனுக்கு ஏற்கனவே கடலூர்மாவட்ட தனியார் பள்ளிகல் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தப்பட்ட ஆணையில் திருச்சி மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்டல் கல்வி அலுவலராக அவர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் முன்னதாக தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த பி.எஸ்.இரமா , நெல்லை மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணிமாற்றம் செயப்பட்டிருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள திருத்தப்பட்ட ஆணையில் கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த தி. கோமதி என்பவருக்கு, முன்னதாக திருப்பூர் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாற்றம் செயப்பட்ட நிலையில், தற்போது கோவை மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்து புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருத்திய மாறுதல் பெற்ர மாவட்டக்கல்வி அலுவலர்கல் முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமதுபொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் பார்வையில் காணும் செயல்முறைகளில் அறிவுத்தியுள்ளவாறு திருத்திய மாறுதல் ஆணை பெற்ற அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிலிருந்து பணியில் மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு, உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணிவிடுவிப்பு / பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படைப்புச் சான்றிதழ் (CTC) உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும், தொடர்புடைய இயக்ககம் / முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.