கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம்
கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ரேஸ் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றவில்லை என்று கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், கிண்டி ரேஸ் கிளப் விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சட்டப்படி வழக்கு தொடர்ந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரேஸ் கிளப்பின் 3 வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.