ரூ.2,000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி

ரூ.2,000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்ததால் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, போன் பே, ஜி பே மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனிடையே ரூ.2,000 வரையிலான ஜிபே, போன்பே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது.

இதனிடையே டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து ஒன்றிய அரசு கருத்து கேட்டது. இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.