காலாண்டுத் தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப். 28 முதல் அக். 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என ஏற்கனவே ஆண்டு நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளது