சென்னை பெருநகர காவல்துறையில்
சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகளாக Child Welfare Police Officers) நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டதின் பேரில் ராதிகா, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு (CCS) அவர்கள் மேற்பார்வையில் இன்று 106.09.2024) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக சுலந்தாய்வு கூடத்தில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் இருந்து ஒரு உதவி ஆய்வாளர் வீதம் மொத்தம் 146 குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களையும் காவல் அதிகாரிகளையும் வரவேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, காவல் துணை ஆணையாளர், Dr.G.வனிதா அவர்கள் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் திருமதி.பார்வதி இளஞ்சிறார் வழக்கறிஞர் (IIB), அவர்கள் இளஞ்சிறார் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைகள் நலன்களின் குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் எவ்விதம் அணுகுவது என்பது பற்றியும் இளஞ்சிறார்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளில் குழந்தைகளை கையாளும்போது செய்ய கூடியது மற்றும் செய்ய கூடாதது பற்றியும் குறித்த பயிற்சி வழங்கினார்கள்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி ஆதிலட்சுமி அவர்கள் பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அணுகுவது பற்றியும் அவ்வாறான வழக்குகளில் குழந்தைகளை கையாளுகின்ற குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் செய்ய கூடியது மற்றும் செய்ய கூடாதது பற்றியும் குறித்த பயிற்சி வழங்கினார்கள். ராஜ்குமார் அவர்கள் (Chair Person) மாவட்ட குழந்தைகள் நல குழுமம். அவர்கள் குழந்தைகள் நல குழுமத்தின் செயல்பாடுகள் பற்றியும், Child Help Line No 1098 முலம் குழந்தைகளின் பிரச்சினைகளையும் பாதுகாப்பினையும் மேம்படுத்துவது குறித்த பயிற்சியினை அளித்தார்.
ஆல்பெர்ட் நன்னடத்தை அலுவலர் அவர்கள் குழந்தைகளுக்கான வழக்குகளில் நன்னடத்தை அலுவலரின் பங்கு பற்றியும் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறை பற்றியும் பயிற்சி அளித்தார். ஜேம்ஸ் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் அவர்கள் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகையை பெறுவது எவ்வாறு என்பது குறித்தும் பயிற்சி அளித்தார். அனைத்து காவல்நிலையங்களில் நியமிக்கப்பட்ட குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாளும் முறைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை குறித்தும், பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பாலியல் குற்றங்கள் மீது எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் Standard Operating Procedure (SOP) பற்றியும், இளம் சிறார் நீதிச்சட்டம் மற்றும் SJPU பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் இது சம்மந்தமாக கலந்தாய்வும் நடைப்பெற்றது.