ரஞ்சித் சிங் ராஜினாமா
அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து ரஞ்சித் சிங் ராஜினாமா செய்துள்ளார். அக்.5ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட ரஞ்சித் சிங் திட்டமிட்டுள்ளார். பாஜகவின் 67 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 9 எம்எல்ஏக்களில் ரஞ்சித் சிங்கும் ஒருவர்.