சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல்

சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2014 முதல் 2024 வரையிலான வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கோயில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? கோயில் காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளனவா? கோயிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை அர்ச்சனை தரிசனத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்.19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.