அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அடிக்கடி கைது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது மீனவர்கள் சமூகத்தினருக்கு துயரை தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.