12 ஆண்டுகளாக தினமும் வெறும் 30 நிமிடங்கள் மட்டும் தூங்குவதை
ஜப்பானின் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் வெறும் 30 நிமிடங்கள் மட்டும் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ள நபர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளார். மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 6 முதல் 8 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. ஆனால் ஜப்பானை சேர்ந்த 40 வயதான டெய்சுகே ஹோரி தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார். இதனை அவர் 12 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். தனது வாழ்க்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் இப்படி 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக கூறுகிறார்.
இதற்கு அவர் தனது உடலையும், மூளையையும் இதற்கு பழக்கி கொண்டுவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து கொள்வதாகவும் டெய்சுகே ஹோரி கூறியுள்ளார். ஆனால் இது மிகவும் ஆபத்தான விஷயம் என கூறும் மருத்துவர்கள் சரியான தூக்கம் இல்லை என்றால் இதய பிரச்சனைகள் முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். தினசரி குறைந்தது 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என கூறும் மருத்துவர்கள் இயற்கைக்கு மாற்றான செயல்களை மனித உடல்கள் தாங்கி கொள்ளாது என அறிவுறுத்துகின்றன.