எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
தருமபுரியில் உணவக உரிமையாளரை ஷூவை கழற்றி தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்துள்ளனர். உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ஷூவை கழற்றி தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சாப்பிட்ட உணவுக்கு, கடை உரிமையாளர் பணம் கேட்டதால் எஸ்.எஸ்.ஐ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிஎஸ்பி சிவராமன் விசாரணை நடத்தியதில் எஸ்.எஸ்.ஐ. காவேரி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானதால் எஸ்.எஸ்.ஐ. காவேரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி மகேஸ்வரன் ஆணை பிறப்பித்துள்ளார்.