வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
வெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் www.eshram.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிய குடும்ப அட்டை பெற்றதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் பொருட்களைப் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.