குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச்
குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து காயமடைந்தவர்களை மீட்க கடலோரக் காவல்படையில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் அனுப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கடலில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துள்ளானது. போர்பந்தர் அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் 4 பேர் சென்றதாக கடலோர காவல்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
போர்பந்தர் அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. காணாமல் போன 3 பேரையும் தேட 4 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. போர்பந்தர் அருகே கடலில் உள்ள ஹரி லீலா கப்பலில் நோயாளியை மீட்கச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.