ஐஇ-814 வெப்தொடரில் கதாபாத் திரங்களுக்கு ஹிந்துக்கள் பெயர்

இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். இனி முழுமையாக ஆய்வு செய்த பிறகே தொடர்களை வெளியிடுவோம் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. நெட்பிலிக்ஸ் வெளியிட்ட ஐஇ-814 வெப்தொடரில் கதாபாத் திரங்களுக்கு ஹிந்துக்கள் பெயர் வைத்து சர்ச்சையானதால், விளக்கமளிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்க நெட்பிலிக்ஸ் நிறுவனம் தங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிக்கும்படி ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. அதற்கு பத்திலாளித்துள்ள நெட்பிலிக்ஸ்; இந்த விவகாரத்தில் தாங்கள் வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை, இப்படி நடந்தது தவறானது தான், தவறாக நடந்திருக்கக்கூடாது. இனி நாங்கள் நெட்பிலிக்ஸில் வெளியிடும் படங்கள், தொடர்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்து கொள்கிறோம். மேலும் கவனமுடன் செயல்படுவோம். இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்” என உறுதியளித்துள்ளது.

IC-814 என்பது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டு பாகிஸ்தான் அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்பட்டது. அந்த விமானத்திலுள்ள பயணிகளை விடுவிக்க தீவிரவாதி ஒருவரை விடுவிக்க வேண்டும் என தீவிரவாத அமைப்புகள் கோரிக்கை வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தேச விரோதிகள் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நெட்பிலிக்ஸ் செயல்பட கூடாது என்பது ஒன்றிய அரசின் நிலைப்பாடாக இருந்தது. இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது என நெட்பிலிக்ஸ் உறுதியளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.