உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை தரும் எண்ணெய் குளியல்

பல தலைமுறைகளாக ‘எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கும், உடலுக்கும் எண் ணெய் தேய்த்து வாரத்திற்கு இருமுறை அல்லது ஒருமுறை குளித்து வந்தால் ஆரோக் கியமாக இருப்பார்கள். இது நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபா வளியில் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு இலை இவைகளை இடித்து ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் ஆறிய பிறகு ஒரு கையளவு எடுத்து உச்சந்தலையில் சூடு பறக்க தேய்த்து, எண்ணெய் குளியல் செய்யும்போது உடல் நல்ல புத்துணர்ச்சி அடையும். பல நன்மைகளும் வந்து சேரும். நாம் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு அறிவியல் ரீதியாகவும் பல தொடர்பு இருக்கின்றது. உடல் சூடு, உடல் வலி, தசை வலி, சோர்வுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது எண்ணெய் குளியல். வாரம் ஒருமுறை எண்ணெய்யை தேய்த்து அந்த உடலோடு வெயிலில் நின்றால் சூரியனில் இருக்கும் செரோடோனின் ஹார்மோன் எளிதில் நமக்கு கிடைக்கும். இதனால் நமது உடல் புத்துணர்வு அடைந்து சுறுசுறுப்பாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.