அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
‘2026 சட்டமன்றத் தேர்தல் சுமுகமாக இருக்காது’ –
லால்குடி நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என தி.மு.க நிர்வாகிகள் வேதனைப்படுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலைப் போன்று 2026 சட்டப்பேரவை தேர்தல் சுமுகமாக இருக்காது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை” என்று கூறினார்