வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் பள்ளிகள் திறப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் காணாமல் போன 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தற்போது அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகளில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.