தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக் கொண்டால்
தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக் கொண்டால் அடுத்த 1/2 மணி நேரத்திலேயே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மாணவர்களின் கல்வி விசயத்தில் நிர்பந்திக்கும் செயலை ஏற்க இயலாது என தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஏற்க இயலாத பல விசயங்கள் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.
மத்திய கல்வித் திட்டத்தை விட, தமிழ்நாடு கல்வித் திட்டம் சிறப்பாக தான் உள்ளது – ஆளுநருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்.
ஆளுநர் வர விரும்பினால் எந்த நூலகத்திற்கு வேண்டுமானாலும் அவரை அழைத்துச் செல்ல நான் தயார்.
நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம், எது சிறந்த கல்வித்திட்டம் என ஆளுநரே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி