ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் கைது
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்காக சென்ற போது அமலாக்கத்துறை வீட்டிற்குள் அமானத்துல்லா அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது. தன்னை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சிப்பதாக அமானத்துல்லா வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.