புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்
பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர் ஆகினார். 2018-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு புதுச்சேரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.