பாராலிம்பிக் துப்பாக்கிச் சூடு- தங்கம் மற்றும் வெண்கலத்தை வென்ற இந்தியா
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த அவ்னி லேகரா.
பாரிஸில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில்,பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவ்னி லேகரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதிற்காக பரிந்துரை பட்டியலில் அவ்னி இருந்தார்.
பாராலிம்பிக் போட்டியில் முதலில், கொரிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான யுன்ரி லீயை விட அவ்னி 0.8 புள்ளிகள் பின்தங்கி இருந்தார். கடைசி சுற்றில் கொரிய வீராங்கனையால் 6.8 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் அவ்னி 10.5 புள்ளிகள் எடுத்தார்.
மொத்தமாக அவ்னி 249.7 புள்ளிகளையும், யுன்ரி லீ 246.8 புள்ளிகளையும் பெற்றனர். இறுதி சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்தி அவ்னி முதலிடம் பெற்றார்.
இதே போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவ்னி ஜெய்பூர் நகரை சேர்ந்தவர், அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு அவருக்கு நடந்த கார் விபத்திலிருந்து முதுகுத் தண்டுவட பாதிப்புக்கு உள்ளானார்.
இதற்குப் பிறகு, சக்கர நாற்காலியின் உதவியுடன் மட்டுமே அவரால் நகர முடிந்தது. இதனால் வாழ்க்கையில் மனம் தளராமல் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு, இன்று அவர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.