தனி விமானத்தில் நடிகர் விஜய் சீரடி பயணம்

சென்னை:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விஜய் மும்முரம் காட்டி வருகிறார்.இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் அவர் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.#BREAKING || சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்லும் விஜய்சென்னையில் இருந்து தனி விமானம் முலம் சீரடி புறப்பட்டார் நடிகரும், தவெக தலைவருமான விஜய் #tvk #vijay #actorvijay pic.twitter.com/mhuPZu7vZH— Thanthi TV (@ThanthiTV) August 30, 2024

Leave a Reply

Your email address will not be published.