மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை
நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து அவர் கடந்த 27ம் தேதி இரவில் புறப்பட்டு துபாய் சென்றார். அங்கிருந்து அமெரிக்காவிற்கு பயணித்து நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்றார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒரே நாளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது; “ஒரு உற்சாகமான மாலைப் பொழுதில், முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆற்றல்மிக்க விவாதங்களை நடத்தினோம். எல்லையில்லா ஆற்றல் மற்றும் பரந்த வாய்ப்புகளின் நிலமான தமிழ்நாட்டிற்கு, உலகளாவிய முதலீட்டாளர்களை அழைத்தோம். நிலையான உறுதியுடன் நம் கனவுகளைத் துரத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.