மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க
சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடை, உணவகம் என பல ஆக்கிரமிப்புகளும், வாகனங்கள், ஷேர் ஆட்டோ நிறுத்தும் இடமாக நடைபாதை உள்ளது என்றும் சாலையோர நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை; ஆபத்தான முறையில் வாகனங்கள் செல்வதால் விபத்து அதிகரிப்பு என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது