சூரிய சக்தியை மின் கட்டமைப்பில் நுகர்வு செய்து சாதனை
: 25.08.2024 ஞாயிறன்று தமிழகத்தில் அதிக பட்சமாக 43.20 மில்லியன் யூனிட் சூரிய சக்தியை மின் கட்டமைப்பில் நுகர்வு செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், அன்று 5648 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்துள்ளது. எனினும், 09.08.2024 அன்று உற்பத்தி செய்த 5979 மெகாவாட் அளவே இதுவரை செய்யப்பட்ட உச்சபட்ச சூரிய உற்பத்தியாகும். இவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் ஒளி மயமான எதிர்காலத்தை கட்டியம் கூறுகின்றன.
சூரிய மின்னாற்றல் (solar power) என்பது சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்னாற்றலாகும். இது நேரடியாக ஒளிமின்னழுத்திகளைக் கொண்டோ அல்லது மறைமுகமாக சூரிய ஆற்றல் கொண்டு செறிவூட்டும் முறையிலோ பெறப்படுகிறது. ஒளிமின்னழுத்திகளில் ஒளிமின் விளைவைப் பயன்படுத்திச் சூரிய ஒளி நேரடியாக மின்னோட்டமாக மாற்றப்படுகிறது. செறிவூட்டல் முறையில் பரந்த அளவு சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள் அல்லது கண்ணாடிகளைக் கொண்டு குவிக்கப்பட்டு, அதனால் உருவாக்கப்படுகின்ற வெப்பத்தின் மூலம் நீரை ஆவியாக்கி, அதிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
ஒளிமின்னழுத்திகள் ஆரம்பத்தில் கணிப்பான் மற்றும் மின் விளக்குகள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மின்சார சாதனங்களில் மட்டுமே மின் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது. வணிக ரீதியாக செறிவூட்டப்பட்ட சூரிய மின் நிலையங்கள் முதன்முதலில் 1980 களில் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு, ஒளிமின்னழுத்திகளின் விலை குறைந்ததால், வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களின் மேற்கூரைகளில் இவை பரவலாக பொருத்தப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 43.20 மில்லியன் யூனிட் சூரிய மின்சக்தியை மின்கட்டமைப்பில் நுகர்வு செய்து சாதனை படைத்துள்ளது. ஞாயிறன்று 5648 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்துள்ளது