சூடானில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கால் அணை உடைந்து
சூடானில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கால் அணை உடைந்து 60 பேர் பலியான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் கதி குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சூடான் நாட்டில் ஏற்கனவே கடந்தாண்டு ஏப்ரல் முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வருகிறது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில், தற்போது பெய்து வரும் கனமழையால் மேலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் வெள்ளத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செங்கடல் அருகே உள்ள அர்பாத் அணைப் பகுதியில் பெய்த கனமழையால், அணையானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 20 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததாகவும், 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.