வேளச்சேரி பேன்சி ஸ்டோரில் தீ

வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மெயின் சாலையில் ஒரு பேன்சி ஸ்டோர் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஊழியர்கள் வழக்கம் போல கடையை திறந்தனர். முதல் தளத்தில் உள்ள ஷட்டரை திறந்தபோது தீ எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். இதற்கிடையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.