யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஸன்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின்படி ஜம்மு-காஷ்மீருக்கு தந்திருந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ல் ரத்து செய்தது ஒன்றிய அரசு. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஒட்டுமொத்தமாக மத்திய ஆட்சியின் கீழ் பாஜக அரசு கொண்டுவந்தது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களின் பலன்கள் தங்கள் வீட்டு வாசலில் கிடைக்கும் என்ற பதிவில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கையில், இந்த ஐந்து மாவட்டங்கள் உருவான பிறகு, மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும். பரப்பளவில் லடாக் மிகப் பெரிய யூனியன் பிரதேசம். தற்போது லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.