மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்
அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்:
அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மதுரையில் அதிமுக ஜெ. பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் உடனடியாக சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது. சித்தம் கலங்கியவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது.
ஒரு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாத அரைவேக்காடு, ஆக்டோபஸ், அட்டைப்பூச்சி அண்ணாமலை வரைமுறையுடன் பேச வேண்டும். ஒன்றியத்தில் அவரது கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளாரா?. கல்வி, சுகாதார மேம்பாட்டுக்கு ஏதேனும் திட்டங்களை அறிவிக்க செய்துள்ளாரா? வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவும், வறுமையை ஒழிக்கவும் ஏதேனும் பங்காற்றி உள்ளாரா?