தெலங்கானா முதல்வர் பரபரப்பு பேச்சு
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்க மாட்டேன்:
நம் வருங்கால தலைமுறையினர் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் 3.30 ஏக்கர் நிலம் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபத்தை நேற்று முன்தினம் இடித்து அகற்றினர்.