பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை
பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கணவர், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும். ‘மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது பெண் காவலர்களுக்கு விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்ற அனுமதி என அவர் பேசியுள்ளார்.