இந்தியாவின் அதிகம் விற்பனையான கார்- மாஸ் காட்டிய டாடா பன்ச்..!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் மாடலை பின்னுக்குத்தள்ளி இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பன்ச் பெற்றது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் டாடா பன்ச் மாடல் சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் மாருதியின் வேகன்ஆர் மாடல் 1 லட்சத்து 16 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இந்த பட்டியலில் அதிகம் விற்பனையான மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெசட்டா மாடல் பெற்று இருக்கிறது. இந்தியாவின் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கிரெட்டா மாடல் 1 லட்சத்து 09 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா மாடல்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. இவை முறையே 1 லட்சத்து 05 ஆயிரம் மற்றும் 1 லட்சத்து 04 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.