மாதா கோவிலில் கொடியேற்று விழா
29.08.2024 அன்று அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேற்று விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் பல இயக்கபட உள்ளது.
பக்தர்கள் நலனுக்காக முன்பதிவுடன் கூடிய சிறப்பு பேருந்து ஒன்று 29.08.2024 அன்று புதுச்சேரியில் காலை 10.00 am மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி மதியம் 02.15 மணியளவில்சென்று அடையும்.
இந்த பேருந்து வேளாங்கண்ணியிலேயே காத்திருந்து கொடியேற்று விழா முடிந்தவுடன் இரவு 08.00 pm மணிக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி வந்து அடையும் வகையில் சிறப்பு பேருந்து ஒன்று இயக்கப்பட இருக்கிறது.
இந்த சிறப்பு பேருந்துக்கு முன்பதிவுடன் கூடிய கட்டணம் புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணிg சென்று வர 250+250 =500.00 ரூ.
புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி சென்று வர விரும்பும் பயணிகள் 23.08.2024 மாலை முதல் புதுச்சேரி & காரைக்கால் பேருந்து நிலையத்தில் உள்ள prtc பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் BUS INDIA APP வழியாக முன் பதிவு செய்து கொள்ளலாம்