கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சுமார் 7 செமீ மழை பதிவாகியது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவிகளில் கொட்டும் மழைநீரை கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.