2024ல் SAINT GOBAIN நிறுவனத்தின் CEO சந்தானம்
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு -2024ல் SAINT GOBAIN நிறுவனத்தின் CEO சந்தானம் பங்கேற்று பேசினார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
- தமிழ்நாட்டில் இருப்பவர்களை போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது.
- மேம்பட்ட கல்வித்தரம் மற்றும் திறன்மிக்கவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
நிலையான ஆற்றலை பயன்படுத்தி தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனறால் நீங்கள் தமிழ்நாட்டிற்கு தான் வர வேண்டும்.
- முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் தமிழ்நாட்டில் தான் அதிக வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன.
- முதலீட்டாளர்களை தங்களது கூட்டாளிகளாகப் பார்ப்பது; ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண அரசு எடுக்கும் முனைப்பு உள்ளிட்ட விசயங்கள் தமிழ்நாட்டை முதலீடு செய்ய முன்னணி மாநிலமாக நிலை நிறுத்தியுள்ளன – என பேசினார்.