ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தன வரவுகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

அஸ்வினி : வாதங்களை தவிர்க்கவும்.
பரணி : மாற்றம் உண்டாகும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.

🌴ரிஷபம்🦜🐄

ஆகஸ்ட் 22, 2024

செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவேறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : கட்டுப்பாடுகள் விலகும்.
ரோகிணி : புரிதல்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

🌴மிதுனம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை பகிர வேண்டாம். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : பொலிவுகள் மேம்படும்.
திருவாதிரை : பக்குவம் உண்டாகும்.

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

🌴கடகம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

உடனிருப்பவர்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
பூசம் : சுறுசுறுப்பான நாள்.

ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

🌴சிம்மம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுப காரிய பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயணங்களின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.

🌴கன்னி🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

உத்திரம் : குழப்பங்கள் விலகும்.
அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும்.

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

🌴துலாம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலை மாற்ற விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

🌴விருச்சிகம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

குழந்தைகளின் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பணிகளில் லாபத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

விசாகம் : கலகலப்பான நாள்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் கைகூடும்.

🌴தனுசு🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் அமையும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தாய்வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

மூலம் : குழப்பமான நாள்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.

உத்திராடம் : தடைகள் விலகும்.

🌴மகரம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மதிப்பளித்து செயல்படவும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.

அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.

🌴கும்பம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலை மறையும். சமூகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : நெருக்கடிகள் மறையும்.
சதயம் : புத்துணர்ச்சியான நாள்.

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

🌴மீனம்🦜🕊️

ஆகஸ்ட் 22, 2024

மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இணைய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

Leave a Reply

Your email address will not be published.