திருச்செந்தூர் முருகன் கோவிலில்
ஆன்மீக செய்தியில்………
திருச்செந்தூர் மூலவர் குகை கடல் மட்டத்தில் இருந்து பத்து அடி கீழே உள்ளது. சுனாமி வந்த நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்ன நடந்தது தெரியுமா?
கோவில் சுவரை எப்பவும் தொட்டுக்கொண்டிருக்கும் கடல் ரெண்டு கிலோமீட்டர் வரை உள்வாங்கி பின்னோக்கி சென்றுவிட்டது. அதுவரை யாரும் பார்க்காத மிகப்பெரிய பாறைகள் எல்லாம் கடலில் தெரிந்தது.
கோவிலுக்கும், கோவிலை சுற்றி இருந்த எந்த மக்களுக்கும் சிறு தொந்தரவு கூட ஏற்படவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து 2 மைல் தொலைவில் உள்ள ஜீவா நகரில் கூட சுனாமி அலைகள் வந்து பல சேதாரங்களை ஏற்படுத்தியது என்று செய்திகள் வெளிவந்தன. அது ஏன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. அவ்வளவு வேகமான அலைகளுடன் வரும் கடல் முருகனின் சன்னிதானத்தை அடைந்தவுடன் அமைதியாக திரும்பி செல்லும். இதை நாமே நேரில் திருச்செந்தூர் சென்றால் பார்க்கலாம். அதேபோல நாம் மனதில் எவ்வளவு கவலைகளுடன் இந்த கோவிலுக்கு சென்றாலும் நம்மை சாந்தப்படுத்தி முருகப்பெருமான் அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம்.