குலதெய்வ அருள் பெற

ஆன்மீக செய்தியில்………..குலதெய்வ அருள் பெற

நாம் குலதெய்வ வழிபாடு செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தாலும் உங்களின் வீட்டில் உங்களின் குலதெய்வத்தை வரவழைத்து அதற்கு பூஜை செய்யும்பொழுது மட்டுமே நீங்கள் கேட்ட வரத்தை உங்களின் குலதெய்வம் தரும்.

உங்களின் குலதெய்வம் உங்களுக்கு மட்டும் குலதெய்மாக இருக்காது உங்களின் பங்காளிகளுக்கும் அது குலதெய்வமாக இருக்கும்.

இந்த காலத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

அண்ணன் தம்பி கூட ஒற்றுமையாக இருப்பதில்லை.

பொறாமை குணத்தில் இருக்கின்றனர்.

பங்காளிகளைப்பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.

பங்காளிகள் என்ன செய்கின்றனர் என்றால் யாராவது ஒரு ஆன்மீகவாதிகளிடம் சென்று குலதெய்வத்தை அவர்களுக்கு மட்டும் செய்வது போல் செய்து விடுகின்றனர்.

பங்காளிகளில் ஒருத்தர் மட்டும் நன்றாக இருக்கின்றார்

மீதி உள்ளவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

இப்படி எல்லாம் செய்வது தவறான வழி என்றாலும் அதற்கு துணை போவதும் ஆன்மீகவாதிகளாக தான் இருக்கின்றனர்.

ஒவ்வொருவரின் குலதெய்வத்தின் கதி இப்படி இருக்கின்றது

அதற்கு தான் உங்களின் பங்காளி என்னதான் குல தெயவத்தை வசியம் செய்து அவர்களுக்கு மட்டுமே நல்லது செய்வது போல செய்தாலும்
உங்களின் குலதெய்வம் உங்களுக்கும் நல்லது செய்வதற்க்கு பச்சை பரப்புதல் என்ற வழிமுறையை கட்டாயம் செய்யவேண்டும்.

இந்த பச்சை பரப்புதல் என்பது நான் கண்டுபிடித்த ஒரு செயல் கிடையாது.

நமது முன்னோர்கள் செய்து வந்ததை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன்.

உங்களுக்கு முன்னோர்கள் இருந்தால் இதனைப்பற்றி
கேட்டீர்கள் என்றால் மிக சரியாக சொல்லுவார்கள்.

முன்னோர்கள் செய்து வந்ததை காலத்தின் கோலமாக விட்டுவிட்டார்கள் நமது தலைமுறையினர்.

அதனை மீண்டும் எடுத்து உங்களுக்கு சொல்லுகிறேன்.

பச்சை பரப்புதல் வழிபாட்டு முறை:

உங்களின் வீட்டில் உள்ள பூஜையறையில் விளக்கை ஏற்றி அந்த விளக்கு முன்னாடி ஒரு தலைவாழை இலையை வைத்து பச்சை அரிசியை தண்ணீரில் நனைத்து அந்த அரிசியை எடுத்த இலை முழுவதும் பரப்புங்கள்.

பச்சை அரிசி மேல் வெல்லத்தை துண்டாக வெட்டி அதில் போடவேண்டும்.

ஐந்து உருண்டை மாவிளக்கு பிடித்து ஊற வைத்து வெல்லம் தூவப்பட்ட பச்சரிசி மேல் வையுங்கள்

ஐந்து மாவிளக்கிலும் நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு எந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் பிடிக்கும் என்பதை பார்த்து அந்த எண்ணெய் பயன்படுத்தலாம் அல்லது நெய் ஊற்றி தீபத்தை ஏற்றலாம்.

மாவிளக்கில் தீபம் நன்றாக எரியவேண்டும்.

இலையில் பழ வகைகளை எல்லாம் படைக்கக்கலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு என்ன பிடிக்கும் என்பதை பார்த்து நைவேத்தியமாக செய்து வைக்கலாம்.

ஒரு சில குலதெய்வத்திற்க்கு அசைவத்தை கூட சமைத்து வைத்து படைப்பார்கள்.

அவர் அவர்களின் வழிமுறையில் என்ன தேவையோ அதனை வைத்து படைத்துக்கொள்ளுங்கள்.

கூடுமானவரை சர்க்கரை பொங்கல் படையலாக செய்து வைப்பது நல்லது

அமாவாசை நாட்களில் மாலை வேளையில் இதனை செய்தால் நல்லது.

மாதம் மாதம் இதனை செய்வார்கள். மூன்று மாதத்திற்க்கு ஒருமுறை கூட இதனை செய்யலாம்.

இதனை செய்வது நமது குடும்பத்தை காப்பாற்றும்.

எந்த பிரச்சினையும் நமது குடும்பத்திற்க்கு வராமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை செய்யலாம்.

இந்த பச்சை பரப்புதல் பூஜை செய்யும்பொழுது மந்திரங்களை சொல்லவேண்டும் என்பது கிடையாது.

மனதால் நினைத்தால் போதும். செய்கின்ற முறை மட்டுமே ஒழுங்காக இருக்கவேண்டும்

கலியுகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்க்கு இந்த வழிபாடு
மிக உகந்தது.

வீட்டில் இருக்கும் கன்னி பெண்களுக்கும் இது நல்லது.

ஒரு பெண் முறை தவறி செல்லுகிறாள் என்றால் குலதெய்வ அருள் இல்லாமல் மட்டுமே தான்.

இன்றைக்கு வரும் பிரச்சினைக்கு காரணம் குலதெய்வ அருள் இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணம்.

குலதெய்வ அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை முதலில் செய்வது நல்லது

Leave a Reply

Your email address will not be published.