ஆன்மீக செய்தியில்

ஆன்மீக செய்தியில்………நிலையானது எது நிலையற்றது எது

மனிதரில் சிறந்தோனே (அர்ஜுனனே), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இவ்விரண்டு நிலைகளிலும் தன்னிலை மாறாது இருப்பவனுமே, நிச்சயமாக விடுதலைக்குத் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.

 ஆன்மீக உணர்வின் முன்னேற்ற நிலைகளை அடைவதில் ஸ்திரமான மனஉறுதியுடையவனும், இன்ப துன்பங்களின் பலமான தாக்குதலை சமமாகப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன் முக்திக்குத் தகுதியுடைவன் ஆவான். வர்ணாஷ்ரம தர்மத்தின் நான்காவது நிலையான துறவு (சந்நியாச) நிலை, மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கடினமான நிலையாகும். ஆயினும், தன் வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்வதில் விருப்பமுடையவன், எல்லா சிரமங்களுக்கு இடையிலும் நிச்சயமாக சந்நியாசத்தை ஏற்றுக்கொள்கிறான். இச்சிரமங்கள் பொதுவாக, குடும்ப உறவுகளைத் துண்டிப்பதாலும் மனைவி மக்களின் உறவை விட்டு விடுவதாலும் எழக்கூடியவை. ஆனால் இச்சிரமங்களை பொறுத்துக்கொள்ள முடிந்தால், அவனது ஆன்ம உணர்வுப் பாதை நிச்சயமாக முழுமை பெறுகிறது. அதுபோல, குடும்பத்தினருடனும் அன்பிற்கு உரித்தானவர்களுடனும் போர் புரிதல் கடினமானதே என்றபோதிலும், அர்ஜுனன் (சத்திரியன் என்ற முறையில் தனது கடமைகளை ஆற்ற வேண்டியவன்), அதனை உறுதியுடன் செயலாற்ற முயலும்படி அறிவுறுத்தப்படுகிறான். பகவான் சைதன்யர் தனது இருபத்துநான்காம் வயதில் சந்நியாசம் ஏற்றுக் கொண்டபோது, அவரையே நம்பியிருந்த இளம் மனைவியையும் முதிர்ந்த தாயையும் கவனிப்பதற்கு யாரும் இல்லை. இருப்பினும், உயர்ந்த நோக்கத்திற்காக சந்நியாசம் ஏற்ற அவர், உயர்ந்த கடமைகளை நிலையாகச் செயலாற்றினார். இதுவே ஜட பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான வழி. 

உண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு (உடலுக்கு) நீடிப்பும், நித்தியமானதற்கு (ஆத்மாவிற்கு) மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கையையும் ஆராய்ந்தே அவர்கள் இதைத் தீர்மானித்துள்ளனர்.

 மாறும் உடலுக்கு நீடிப்பில்லை. நவீன மருத்துவ விஞ்ஞானமும்கூட பல்வேறு உயிரணுக்களின் செயல்கள் மற்றும் விளைவுகளால், உடல் எப்போதும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறது. அம்மாற்றத்தினாலேயே உடலில் வளர்ச்சியும் முதுமையும் ஏற்படுகின்றது. ஆனால் உடல் மற்றும் மனதின் பல்வேறு மாற்றங்களுக்கு இடையிலும், ஆத்மா மாறாமல் நிலையாக இருக்கின்றது. இதுவே ஜடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான வேறுபாடாகும். உடல் இயற்கையாகவே என்றும் மாறிக் கொண்டுள்ளது; ஆத்மா இயற்கையாகவே நித்தியமானது. உண்மையைக் கண்ட எல்லா வகுப்பினராலும் (அருவவாதிகளாலும் உருவவாதிகளாலும்) இம்முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் (2.12.38), விஷ்ணுவும் அவரது இருப்பிடங்களும், சுய ஒளி பெற்ற ஆன்மீகத் தன்மையுடையவை (ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவனானி விஷ்ணு:) என்று கூறப்பட்டுள்ளது. நிலையானவை, நிலையற்றவை என்ற சொற்கள் ஆன்மீகத்தையும் ஜடத்தையும் குறிக்கின்றன. உண்மையைக் கண்ட அனைவருடைய கருத்தும் இதுவே.

 அறியாமையின் ஆதிக்கத்தால் மயங்கியுள்ள உயிர்வாழிகளுக்கு, பகவான் அளிக்கும் அறிவுரையின் தொடக்கம் இதுவே. வந்தனைக்குரியவர், வந்தனை செய்பவர் இவர்களுக்கு இடையிலான நித்திய உறவை மீண்டும் நிலைநிறுத்துவதும், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கும் அவரது அம்சங்களான உயிர்வாழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்வதே அறியாமையைக் களைவதாகும். தன்னைப் பற்றி ஆராய்வதாலும், தனக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை, முழுமைக்கும் பகுதிக்கும் இடையிலான உறவாக உணர்வதாலும், பரத்தின் இயற்கையைப் புரிந்து கொள்ள முடியும். வேதாந்த சூத்திரத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும், தோன்றக் கூடியவை அனைத்தின் மூலமும் பரமனே என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தோன்றக்கூடியவை, உயர்ந்த இயற்கை, தாழ்ந்த இயற்கை என்று அறியப்படுகின்றன. ஏழாம் அத்தியாயத்தில் வெளிப்படுத்தபட்டிருப்பதைப் போல, உயிர்வாழிகள் உயர்ந்த இயற்கையைச் சேர்ந்தவர்கள். சக்தியுடையவருக்கும் (சக்திமானுக்கும்), சக்திக்கும் வேறுபாடு இல்லை

Leave a Reply

Your email address will not be published.