Win tv தேவநாதனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது.
நிதி நிறுவன வங்கிக் கணக்கையும் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் முடக்கியுள்ளனர்.
நிதி நிறுவனம் மீது இதுவரை 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, அவரது தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது