மருத்துவர்கள் மாணவர்கள் போராட்டம்
புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் பதவியை உடனடியாக நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் வேண்டுகோள் .
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள சூழலில்.நாடு முழுவதும் மருத்துவர்கள் மாணவர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துள்ளது.
புதுவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது..
மேலும் பல்வேறு மருத்துவ மனைகள் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசும் தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.இது போன்ற சுகாதார துறை அத்தியாவசியம் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் புதுவை மாநில சுகாதார துறை இயக்குநர் பதவி நிரப்ப படாமல் உள்ளது.ஏற்கனவே இருந்த இயக்குநர் பதவி காலம் கடந்த 14 ஆம் தேதி முடிவுற்ற நிலையில் இப்போது வரை பதவி நிரப்ப படாமல் உள்ளது.
குரங்கு அம்மை நோய் பரவல்,மருத்துவ மாணவர் சேர்க்கை போன்ற அத்தியாவசிய பணிகள் சுகாதாரத்துறை இயக்குனர் பதவிக்கு உள்ளது.எனவே புதுவை முதல்வர் அண்ணன் ரங்கசாமி அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார துறை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஒதுக்காமல் உடனடியாக தனி இயக்குநர் நியமனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.