தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையதிற்கு தலைவரை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி C.T.செல்வம் தலைமையில், தேர்வுக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிகையில்:
மின்சாரச் சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் C.T.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது

தேர்வுக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் 16.08.2024 அன்று மாலை 6.00 மணி வரை வரவேற்கப்பட்டது. இந்நிலையில், தேர்வுக் குழுவின் முடிவிற்கிணங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பினை 31.08.2024 மாலை 6.00 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த விவரங்கள் இணையதள முகவரி https://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.