தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர். ஆளுநர் ஏற்கனவே ஆக.1ம் தேதி டெல்லி சென்று திரும்பிய நிலையில், 2வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பதவி நீட்டிப்புக்கான உத்தரவு இதுவரை வரவில்லை என கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.