சிமெண்ட் லாரியின் பின்புறம் கார் மோதியதில்
திண்டிவனம் அருகே சிமெண்ட் லாரியின் பின்புறம் கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தார். நத்தமேடு புறவழிச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரத்தினசாமி, அவரது மகன் ரமேஷ் உயிரிழந்தார். விபத்தில் கிண்டியைச் சேர்ந்த ரத்தினசாமியின் மற்றொரு மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.