அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணய வெளியீட்டு

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னால் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிசில் தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னால் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில், நூற்றாண்டு நிறைவு விழாவாக ரூ.100 நினைவு நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இன்று மாலை 6.50 மணியளவில் வெளியிடவுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெற்றுகொள்ளவுள்ளார. இந்த நாணயத்தினை வெளியிட தமிழகம் வந்துள்ள ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணய வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதனை அடுத்து கலைஞர் நினைவிடம் அருகே உள்ள கலைஞர் உலகம் எனப்படும் அருங்கட்சியத்தை பார்வையிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.