கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்
அமைச்சரவையின் முடிவை ஆளுநர் மீறியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்
அமைச்சரவையின் முடிவை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.முடா முறைகேடு குறித்த புகாரில் விசாரணைக்கு ஒப்புதல் தரும் முடிவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என ஆக.1-ல் கர்நாடக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதாக டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவுக்கு துணையாக கர்நாடக அமைச்சரவை உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.