விஜய் நடிக்கும் ‘கோட்’ என்ற படத்தின் டிரைலர்
விஜய் நடிக்கும் ‘கோட்’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகிறது என்று, புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25வது படமாக கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் ஆகியோர் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்க, வெங்கட் பிரபு எழுதி இயக்கும் பான் இந்தியா படமான இது, வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், ‘ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. விஜய், வெங்கட் பிரபு கூட்டணி பல்வேறு அற்புதங்களைச் செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது
இதில் ஒரு சிறுபகுதியான டிரைலர் வெளியாகிறது’ என்றார். இரு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் நடிக்கும் 68வது படமான ‘கோட்’, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்றும், தான் ஏற்றுள்ள இரு கேரக்டர்களுக்காக கடினமான உழைப்பை விஜய் வழங்கியுள்ளார் என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.